அமெரிக்காஅரசியல்உலகம்கவர் ஸ்டோரி

அமெரிக்க அரசியல் ; இருபெரும் அமெரிக்க கட்சிகளின் கொள்கை என்ன? அரசியல் நிலைப்பாடு என்ன?

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன். மேலும் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கமலா ஹாரிஸ். அது மட்டும் அல்ல இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர்களில் அதிக வயதானவரும் ஜோ பைடன் தான். அதோடு கடந்த 30 வருடங்களாக அதிபர்களாக இருப்பவர்கள் தொடர்ந்து இருமுறை அதிபராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்கள். அதன்படி 30 வருடங்களுக்கு பிறகு தேர்தலில் தோற்கும் அதிபர் என்கிற பெருமை தற்போதைய அதிபர் டிரம்ப்பிற்கு கிடைத்துள்ளது.

மேலே சொன்னவை எல்லாம் பலர் அறிந்தவை தான். ஆனால் அங்குள்ள கட்சிகள் பற்றியோ அந்த நாட்டின் அரசியல் சூழல் பற்றியோ பலருக்கு தெரிந்திருக்காது. அந்த நாட்டில் பல தசாப்தங்களாகவே அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவை இரண்டு கட்சிகள் தான். ஒன்று ஜனநாயக கட்சி, இன்னொன்று குடியரசு கட்சி. அதை தவிர இன்னும் சில கட்சிகள் அங்கு இருந்தாலும் அமைப்பு ரீதியாகவும், ஆதரவாளர்கள் ரீதியாகவும் பலமுள்ளவை இந்த இரு கட்சிகள் தான். இரு கட்சிகளுக்கும் முதலாளித்துவ கட்சிகள் தான் என்றாலும் இரு கட்சிகளுக்கும் சில அடிப்படை வேறுபாடுகளும் இருக்கின்றன. பல காலங்களாகவே ஜனநாயக கட்சி தாராளவாத கட்சியாகவும், இடதுசாரி சார்புடைய கட்சியாக திகழ்கிறது. அதே போல குடியரசு கட்சி பழமைவாத கட்சியாகவும் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் சில கட்சிகள் வலுவாக திகழ்வதை போல சில அமெரிக்க மாகாணங்களில் ஜனநாயக கட்சியும் சில மாகாணங்களில் குடியரசு கட்சியும் வலுவாக திகழ்கின்றன. குறிப்பாக அமெரிக்காவின் கிழக்கு,மேற்கு கடற்கரையை ஒட்டிய மாகாணங்களில்(கலிபோர்னியா,நியூ யார்க், வாஷிங்டன்,நியூ ஜெர்சி) ஜனநாயக கட்சி வலுவாக திகழ்கிறது. அந்த மாகாணங்கள் தொடர்ந்து அதிபர் மற்றும் சென்ட் தேர்தல்களில் ஜனநாயக கட்சிக்கே வாக்களித்து வருகிறது.

 

அதே போல மத்திய மற்றும் தென்கிழக்கு மாகாணங்களில்(டெக்ஸ்சஸ், நியூ மெக்ஸிகோ,அலபாமா) குடியரசு கட்சி வலுவாக திகழ்கிறது. இதர சில மாகாணங்கள் மட்டுமே மாற்றி மாற்றி இரு கட்சிகளுக்கும் வாக்களிக்கின்றன. அவை போர்க்கள மாகாணங்கள் என அழைக்கப்பட்டு அந்த மாகாணங்கள் தான் அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன. ஆகவே அதிபர் வேட்பாளர்கள் அந்த போர்கள மாகாணங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

 

அமெரிக்க வாக்காளர்களின் இந்த எண்ணத்திற்கும் சில காரணங்கள் இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் ஜனநாயக கட்சிக்கு தொடர்ந்து வாக்களிக்கும் கடற்கரையோர மாகாணங்கள் அமெரிக்காவின் மத்திய மாகாணங்களை விட வளர்ச்சி பெற்றவை. அங்கு வாழும் மக்களும் சீனர்கள்,இந்தியர், ஆப்பிரிக்கர் என பன்முக தன்மையோடு இருப்பார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் குடியேறிய மக்கள் அங்கு அதிகம். ஆகவே அந்த மக்கள் இயல்பிலேயே தாராளவாத ஜனநாயக கட்சிக்கு வாக்களிப்பார்கள். ஆனால் குடியரசு கட்சிக்கு ஆதரவளிக்கும் மத்திய மாகாணங்களில் பழமைவாத வெள்ளை இன மக்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அவர்கள் பழமைவாத குடியரசு கட்சிக்கு ஆதரவளிக்கிறார்கள். இது தவிர பிற மாகாணங்களில் இருக்கும் இருதரப்பட்ட மக்களின் நிலை தான் அவர்கள் நாட்டில் அதிபர் யார் என்பதை தீர்மானிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button