கல்வி வேலை வாய்ப்பு

உளவுத்துறையில் ரூ.44000 சம்பளத்தில் வேலை – பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குரூப் “சி”  பிரிவில் Assistant Central Intelligence Officer, Grade II, Executive ஆகிய பிரிவுகளில் 2000 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில்  தேர்வு நடைபெறும் என்றும், இதற்கான வயது வரம்பு 17 முதல் 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருந்தாலே போதுமானது. விண்ணப்ப கட்டணமாக ஆண்கள் ரூ.600ம், பெண்கள் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500ம் செலுத்த வேண்டும். இதற்கான கடைசி தேதி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஊதியமாகமாதம் ரூ.44,900 – 1,42,400 வரை வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/111884419544685830203.pdf என்ற இணையதள முகவரியில் சென்று தெரிவிந்துக்கொள்ளவும்.

Related Articles

One Comment

  1. Howdy are using WordPress for your blog platform? I’m new to the blog world but I’m trying to get started and set up my own. Do you require any coding knowledge to make your own blog? Any help would be greatly appreciated!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button