உள்ளூர் கிரிக்கெட் வீரருக்கு கோரோனா: இந்தியாவில் போட்டிகள் நடைபெறுமா?

விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி வரும் உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. இதில் விளையாடும் வீரர்கள் பயோ பபுள் எனப்படும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடி வரும் பீஹார் வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் பயோ பபுள் உருவாக்கப்பட்டு பல்வேறு மாநில வீரர்ககள் விளையாடிய நிலையில், எந்த வீரருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இப்போது கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுமா? என கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் போட்டிகள் கண்டிப்பாக நடைபெறும் என்றும், பீஹார் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இன்று மாலை முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
tadalafil tadalafil 40 mg daily
order tadalafil