பெருமாள் அவதாரம் எடுத்த நித்யானந்தா… அதிர்ச்சியில் பக்தர்கள்

திருப்பதி பெருமாள் அவதாரம் எடுத்த நித்யானந்தாவின் புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா இந்தியாவிலிருந்து தப்பிய தென் அமெரிக்க கண்டத்தில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனது சீடர்களுடன் வாழ்ந்து வருகிறார்.

கைலாசாவிற்கு வர இலவச விசா, இலவசம் விமான டிக்கெட் என்று அறிவிப்புகளை வெளியிட்ட நித்தியானந்தா, அங்கு பயன்படும் பொற்காசுகளை புழக்கத்தில் விட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சிவன், கால பைரவர் போன்று வேடமணிந்து வீடியோ, புகைப்படங்களை வெளியிட்ட நித்யானந்தா தற்போது திருப்பதி பெருமாள் அவதாரம் எடுத்துள்ளார். அதன் புகைப்படங்களை பகிர்ந்து பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமன ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளில் இருந்து வெளிவாருங்கள். செல்வம் ஏராளமாக பெருகும் என தெரிவித்துள்ளார்.

 இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Back to top button