விளையாட்டு

‘தனித்து விடப்பட்ட நபரைப் போல் உணர்ந்தேன்’ – உண்மையைச் சொன்ன விராட் கோலி

இந்திய அணி கேப்டன் விராட் கோலிஇங்கிலாந்து தொடரின்போது தான் மன அழுத்தத்தில் இருந்ததாக  தெரிவித்துள்ளார்.

‘Not Just Cricket’ என்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் நிகோலஸூடன் விராட் கோலி உரையாடினார். அப்போது 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் நீங்கள் சரியாக விளையாடவில்லை அப்போது மன அழுத்தத்தில் இருந்தீர்களா? என கேள்வி கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த விராட் கோலி , தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது உண்மைதான் என்றும், அதிலிருந்து எப்படி மீள்வது என தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் இந்த உலகத்திலேயே தனித்து விடப்பட்ட நபர் போல உணர்ந்ததாகவும், மன அழுத்தம் ஒரு நபரின் வாழ்க்கையையே அழித்து விடும் எனவும் தெரிவித்தார்.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button