உலகம்

ரஷ்ய அதிபர் புதினுக்கு என்னதான் ஆச்சு? – அதிர்ச்சியில் உலக நாடுகள்

2021ல் பதவி விலக திட்டமிட்டுள்ள ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

உலகின் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் விளாடிமிர் புதின் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் அதிபராக செயல்பட்டு வருகிறார். அவர் 2036 ஆம் ஆண்டு வரை அதிபராக பணியாற்ற மக்கள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவர் வரும் ஜனவரி மாதம் பதவி விலக உள்ளதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

புதின் புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அதேசமயம் அவருக்கு நரம்புகளை பாதிக்கும் பார்கின்சன் நோய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது 2 மகள்களில் ஒருவரை அடுத்த அதிபராக மாற்ற திட்டமிட்டுள்ளார்.

உலகநாடுகள் அனைத்தும் புதினின் உடல்நிலை குறித்த தகவலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஆனால் புதின் பதவி விலக உள்ளார் என்ற தகவலை ரஷ்யாவின் அதிபர் அலுவலகம் மறுத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button