தமிழ்நாடுராமநாதபுரம்

சசிகலாவுக்கு கொரோனா – சசிகலா உடல் நலம் பெற வேண்டி தொண்டர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு ;

சசிகலா  பூரண உடல் நலம் பெற வேண்டி பரமக்குடி ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் இரண்டு நாட்களுக்கு முன்பு, பெங்களூருவில் உள்ள பவ்ரிங் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீரடைந்தது. நள்ளிரவில் மூச்சுத்திணறல் அதிகமானதை அடுத்து, சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து கொள்வதற்காக நேற்று முன்தினம், விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்த நிலையில், பின்னர் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதை அடுத்து விக்டோரியா மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சசிகலா அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் இருப்பதாகவும், அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சசிகலா பூரண நலம் பெறவேண்டி தொண்டர்கள் பல்வேறு வேண்டுதல்களை நடத்தி வருகின்றனர்.அதை தொடர்ந்து பரமக்குடியில் உள்ள பிரசக்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் அமமுக நகர செயலாளர் கலைவாணன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான அமமுக தொண்டர்கள் கலந்து கொண்டு சசிகலா நலம் பெற வேண்டும் என்று வழிபாடு நடத்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button