மருத்துவம்

முகம் மட்டுமல்ல… கை, கால்களின் அழகும் முக்கியம் தான்…!

பொதுவாக நாம் அணியும் உடைகள்,காலணிகள், அணிகலன்கள் ஆகியவை கை, கால்களின் அளவுகளை பொறுத்தே எப்போதும் இருக்க வேண்டும்.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களிடத்தில் மற்றவர்கள் முன் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் மேலோங்கி இருக்கும். பலரும் சரும அழகு, உடைகள், தலைமுடி பராமரிப்பு என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வார்கள்.

இதில் முகம், தலைமுடி தவிர்த்து நிச்சயம் கையும், காலும் அழகாக தெரிந்தால் மட்டுமே உடலின் அழகு முழுவதுமாக பூர்த்தியாகும் என அழகுகலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நகங்களின் இடையே சோப்பு துகள்கள், தூசுக்கள் என நம்மை அறியாமலேயே இருப்பதுண்டு. இதனால் நகங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனை தடுப்பதோடு மட்டுமல்லாமல் நகங்களும் சரியான அளவில் வெட்டப்பட வேண்டும்.

கால்களில் பாத வெடிப்பு, காற்றோட்டோமில்லாத இடங்களில் கருப்பு படிவது என நாம் சாதாரணமாக நினைக்கும் செயல்கள் பின்னாளில் நமது அழகை கெடுக்கும் விஷயங்களில் ஒன்றாக அமைய வாய்ப்புண்டு. எனவே இனி முகம் மட்டுமல்ல கை கால்கள் கூட புற அழகின் முக்கியத்துவம் என்பதை உணருங்கள்.

கை,கால்கள் அழகாக சில குறிப்புகள்:

பாதங்களில் வெடிப்பிருந்தால் 15 நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்யலாம். அதேபோல் நகங்களை வெட்டும் முன் சிறிது எண்ணெய் தடவி விட்டு வெட்டினால், விரும்பும் வடிவத்திலும்,  அழகாகவும் வெட்ட இயலும். கடினமாக உள்ளங்கை கொண்டவர்கள் ஆலிவ் எண்ணெய் கொண்டு கைகளை கழுவ மிருதுவாக மாறும்.

இரும்பு மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும். கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும். கை, கால் முட்டிப் பகுதிகளில் கருப்பு படிந்திருந்தால், அந்த இடத்தில் எலுமிச்சைப்பழச்சாற்றை தேய்த்து சோப்பு போட்டு கழுவினால் அவை மறையும்.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button