உணவுதமிழ்நாடு

ஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய 3 வேளை உணவுகள் எவை?

தமிழ் நாட்டின் உணவு வகைகள் என்பவை அரிசி சார்ந்த உணவுகள் மற்றும் மீன் மற்றும் மாமிச உணவுகள் ஆகும். அரிசியைத் தவிர சோளம் கம்பு கேழ்வரகு போன்ற தானியங்களையும்  கிராமப்புற மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவற்றையும் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். தொல்காப்பியத்தில் இளம்பூரணர் உரையில் கூறும்போது, நெல், காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதுமை என எண்வகைத் தானியங்களைக் குறிப்பிடுகிறார்.

பழந்தமிழர்களின் உணவுகள்

பண்டைய தமிழர்கள் பச்சரிசியால் பொங்கப்பட்ட சோறு “பொங்கல்” என்றும், புழுங்கல் அரிசியால் பொங்கப்பட்ட சோறு “புழுங்கல்” எனவும் அழைத்தனர். உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என 6 வகையான சுவைகளை கொண்ட உணவுகளை சங்ககாலத் தமிழர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால் சங்ககாலத் தமிழகத்தில் சாமை, இறுங்கு, கோதுமை போன்ற தானியங்கள் வழக்கில் இல்லை.

காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் நமது உணவை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நமது சித்த மருத்துவ நூல்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நேர உணவிற்கும் குறைந்தபட்சம் 4 மணி நேர இடைவெளி தேவை. பசிக்கு ஏற்ப சாப்பிடுவது சிறந்தது என கூறப்பட்டுள்ளது.

தற்கால உணவுகள்

இன்றைய அவசர காலத்தில் மனிதனுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள உடல் பருமன் மற்றும் தொப்பைக்கு காரணம், உணவு பழக்கம் தான் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஒரு நாளைக்கு 6 வேலை உண்டால் அதிக கொழுப்பு சேர வழி வகுக்காது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறி வந்தனர். ஆனால், 6 வேளை வேண்டாம்; நாளொன்றுக்கு 3 வேளை உணவே சிறந்தது என்ற புதிய ஆய்வறிக்கை ஒன்றை அமெரிக்கவின் புர்டியு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

காலை உணவுகள்

காலை உணவை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 10 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நீங்கள் உண்ணும் முதல் உணவு, உங்கள் குடலை பாதிக்காத அமிலச் சுரப்பு அதிகம் இல்லாத உணவாக இருக்க வேண்டும். எனவே பால், காபி, டீ என்று சாப்பிடுவதை விட, உப்புமா, இட்லி, பொங்கல் போன்ற உணவுகளை எடுத்துகொள்வது சிறந்தது. இந்த உணவுகளை தயாரிப்பிலும் சாப்பிடும் முறையிலும் சமச்சீரான சத்துகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது.

குறிப்பாக வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளான சோள உப்புமா,கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகுத் தோசை போன்ற உணவுகளை காலையில் உண்பதன் மூலம் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

மதிய உணவுகள்

மதிய உணவை 12 முதல் 2 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.  மதிய நேரத்தில் உடலில் உள்ள ஜீரண நீர்கள் உணவை நன்றாக ஜீரணிக்கும். எனவே மதிய உணவில் கிழங்குகள், பழ வகைகள், பூசணிக்காய், சுரைக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கீரைகள், தயிர், மோர் மற்றும் வறுத்த பொரித்த உணவுகள் உடல் உழைப்புக்கு ஏற்றவிதத்தில் சாப்பிடலாம். மேலும்,  பிரியாணி, மீன், இறைச்சி போன்ற உணவு வகைகள் மதிய நேரத்தில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம். அப்போதுதான் அவை செரிமானமாவதற்கான நேரம் உடலுக்குத் தாராளமாகக் கிடைக்கும்.

இரவு உணவுகள்

இரவில் எளிதில் செரிக்கும் உணவுகளையே, மாலை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். அதிகபட்சம் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு உணவுக்கு இட்லி, சாம்பார், தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகச் சாப்பிட வேண்டும். குறிப்பாக சுண்டைக்காய், துமட்டிக்காய், தூதுவளை போன்றவற்றில் தயார் செய்த வற்றல்களை இரவு உணவுடன் சாப்பிடுவது சிறந்தது.  தாமதமாக இரவு உணவைச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம்.

குறிப்பு : பொதுவாக உணவுகளை வயிறு நிரம்பும் வரை உண்ணக்கூடாது. இரைப்பையில் பாதி அளவுக்கு சாப்பிட வேண்டும், கால் பகுதிக்கு திரவ உணவுகளுக்கும், மீதமுள்ள கால் பகுதியை இரைப்பையில் உள்ள காற்று மற்றும் ஜீரண நீர்கள் உணவை ஜீரணிக்க உதவும் வகையிலும் காலியாக விட வேண்டும்.

Related Articles

5 Comments

  1. Greetings from Idaho! I’m bored at work so I decided to check out your website on my iphone during lunch break. I love the info you provide here and can’t wait to take a look when I get home. I’m shocked at how quick your blog loaded on my cell phone .. I’m not even using WIFI, just 3G .. Anyhow, excellent blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button