தமிழ்நாடு

ரஜினியும்..அரசியலும்..பின்னணியில் இருப்பது பாஜகவா ?

ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை வரவில்லை என்பது ரஜினி ரசிகர்களுக்கே பெரிய ஏமாற்றம் என்று தான் கூற வேண்டும்.ஆனால் திடீரென மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி நாளை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம், ரசிகர்களின் மனநிலை மற்று நிர்வாகிகளின் கருத்து ஆகியவற்றை கேட்டு அறியவுள்ளார்.இந்த கூட்டத்திற்கு பிறகு ரஜினி அரசியலில் இறங்குவது குறித்து இறுதி முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ரஜினியின் இந்த திடீர் ஆலோசனைக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.மேலும் சமீபத்தில் பாஜகவின் ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தியை ரஜினி நேரின் சந்திதுள்ளார்.எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை ரஜினி எடுப்பார் என்ற தகவலும் வெளியாகிவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button