உலகம்

‘என் கர்ப்பத்துக்கு காரணம் காற்று தான்…உடலுறவு இல்லை’ – போலீசாரை அதிரவைத்த இந்தோனேஷிய பெண்

தான் காற்றினால் கர்ப்பம் தரித்ததாக கூறிய பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் இந்தோனேஷியாவில் அரங்கேறியுள்ளது.

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சியாஜூர் நகரைச் சேர்ந்த சிதி ஜைனா என்ற பெண், கடந்த புதன்கிழமை தனக்கு அதிசயம் ஒன்று நடந்ததாக கூறியுள்ளார். பிரார்த்தனை முடிந்து தனது அறைக்கு வந்து படுத்திருந்த போது, திடீரென தனது பிறப்புறுப்பு வழியாக காற்று உடலினுள் நுழைவதை உணர்ந்ததாகவும், பின் 15 நிமிடங்களில் வயிற்றில் வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அன்றைய தினமே குழந்தையும் பெற்றெடுத்துள்ளார்.

தனது கர்ப்பத்திற்கு காரணம் உடலுறவு இல்லை, காற்று தான் என சிதி ஜைனா அடித்துக்கூற, அது எப்படி சாத்தியம் என அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். காற்றினால் கர்ப்பம் என்ற விஷயம் காட்டுத்தீப் போல் ஊரெங்கும் பரவியது. ஆனால் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு தாயான தனது கணவரை பிரிந்து 4 மாதங்கள் ஆனதாக கூறப்படுகிறது.

இதனால் வேறொரு உறவின் மூலம் இந்த கர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் சிதியின் கருத்து மத கோட்பாடுகளை சார்ந்திருப்பதால் கவனமுடன் இந்த விவகாரத்தை கையாண்டு வருகின்றனர். அதேசமயம் பிரசவத்திற்குள் கடைசி சில மணி நேரம் வரை தாய் தனது கர்ப்பத்தைப் பற்றி அறிந்திருக்க மாட்டார் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற கடைசி வரை கர்ப்பம் குறித்து அறியாமல் குழந்தை திடீரென பிறப்பது அரிய நிகழ்வு என்றும், தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button