செய்திகள்விளையாட்டு

டி20 உலகக்கோப்பை தொடர் ஓராண்டு தள்ளிவைப்பு – ரசிகர்கள் ஏமாற்றம்

மகளிர் அணியிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரை ஓராண்டு தள்ளிவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சர்வதேச அளவிலான கிரிக்கெட் தொடர்களும், ஏனைய விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றில் சில போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மகளிர்  டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கு பதிலாக 2023 ஆம் ஆண்டு நடைபெறும் என்றும், தொடரை ஒத்திவைப்பதன் மூலம் வீராங்கனைகளுக்கு முறையான ஓய்வும், போட்டிக்கு தயாராவதற்கான நேரமும் கிடைக்கும் எனவும் ஐசிசி கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button