குறிவைத்து காத்திருந்த கொலையாளி… சுட்டுத்தள்ளிய அமெரிக்க போலீஸ்…

அமெரிக்காவில் சூதாட்ட விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் பிரவுன் நகரில் கேசினோ என்று அழைக்கப்படும் சூதாட்ட விடுதியில் கையில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்துள்ளார். பின அங்கு சூதாடிக் கொண்டிருந்தவர்கள் மீது அந்தநபர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.‌ அங்கிருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சிதறி ஓடியுள்ளனர். இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மர்ம நபரை சரணடையும் படி எச்சரித்துள்ளனர். ஆனால் இதனை பொருட்படுத்தாது போலீசார் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து போலீசார் அந்த நபரை சுட்டு வீழ்த்தினர்.

Back to top button