30 வருடங்களாக நகங்களை வளர்த்த அமெரிக்க பெண் … வைரல் புகைப்படங்கள்..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கைவிரலில் நகங்களை வளர்த்துள்ள சம்பவம் காண்போரை ஆச்சியரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கின்னஸ் உலக சாதனை பக்கத்தை பின்பற்றுபவர்கள் உலகளவில் பலவிதமான சாதனைகளைப் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சற்று வித்தியாசமாகவே உள்ளது என்று தான் கூற வேண்டும்

உலகிலேயே மிக நீளமான கைவிரல் நகங்களைகளை வளர்த்துள்ள நெகிழ்ச்சி சம்பவம்  அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது

அந்த பெண் கிட்டத்தட்ட 30 வருடங்களாக தான் ஆசையாக வளர்த்து பராமரித்து வந்த நகங்களை தற்போது வெட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது..