‘திருமதி இலங்கை’பட்டம் வென்றவரின் தலையிலிருந்து கிரீடத்தை பறித்த உலக அழகி… கடைசியில் நடந்த டிவிஸ்ட்…

திருமதி இலங்கை பட்டம் வென்ற அழகியிடம் இருந்து சில நிமிடங்களிலேயே அந்த கிரீடம் பறிக்கப்பட்ட தகவல் வைரலான நிலையில், அப்பட்டம் மீண்டும் அவருக்கே வழங்கப்பட்டது.

இலங்கையில் மணமானவர்களுக்கான அழகிப்போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுவதுண்டு. அந்த வகையில் தலைநகர் கொழும்புவில் இந்த ஆண்டுக்கான ‘திருமதி இலங்கை’ என்ற அழகிப்போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியானது கடந்த 4ம் தேதி நடந்த நிலையில், இதில் புஷ்பிகா டி சில்வா என்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது. அப்போது அழகிகளுடனே நின்று கொண்டிருந்த ‘திருமதி உலக அழகி’யான கரோலின் ஜூரி, வெடுக்கன புஷ்பிகா தலையில் இருந்த கிரீடத்தை பிடுங்கினார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் நடுவர்களை முடிவை எதிர்த்து கரோலின் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வீடியோவும் வலைதளத்தில் வைரலானது.

இதற்கு விளக்கமளித்த கரோலின், புஷ்பிகா திருமணமாகி விவகாரத்தானவர் என்று கூறியுள்ளார். இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புஷ்பிகா தனது கணவனை விட்டு பிரிந்திருந்தாலும், விவகாரத்து ஆகவில்லை என்பதை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள்ளாக புஷ்பிகாவிடம் மீண்டும் வெற்றி கிரீடம் வழங்கப்பட்டது.

இதனை ஊடகத்தினர் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட புஷ்பிகா, இந்த பட்டத்தை தன்னைப்போல் தனிமையில் குழந்தைகளை வளர்த்து வரும் தாய்மார்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

Back to top button