27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய பில் கேட்ஸ் முடிவு…

பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

1975 ஆம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார். அந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்சை 1994 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் 2000 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக  இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்ததோடு உலகம் முழுவதும் செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதார வசதியுடன் வாழ்வதற்கான வழிகள் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். ஆனால் எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர்.

 

Back to top button