செவ்வாய் கிரகத்தில் வானவில் தோன்றியதா? – நாசா விளக்கம்

செவ்வாயில் வானவில் தோன்றுவது போல் வெளியான புகைப்படத்திற்கு நாசா விளக்கம் அளித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக பெர்சவரன்ஸ் ரோவரை நாசா அனுப்பியுள்ளது. 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி கால் பதித்தது.

செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வு பணிகளை துவங்கியுள்ள பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த மாதம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தில் வானவில் தோன்றியது போல் காட்சி அளித்ததால் விஞ்ஞானிகள் சற்று குழம்பினர்.

இயற்கையாக பூமியில் மழை மற்றும் வெயில் அடிக்கும் போது தோன்றும் வானவில், வறண்ட வளிமண்டத்தை கொண்ட செவ்வாய் கிரகத்தில் எப்படி தோன்றியது என விஞ்ஞானிகள் அதிர்ந்து போயினர்.

இந்த நிலையில் புகைப்படத்தை ஆராய்ந்ததில் புகைப்படத்தில் தென்பட்டது வானவில் அல்ல அது கேமராவின் லென்ஸ் காரணமாக ஏற்பட்ட ஒளிக் கீற்று என நாசா விளக்கமளித்துள்ளது.