பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் மனைவிக்கே இந்த நிலைமையா…

பிரான்ஸின் முன்னாள் அமைச்சர் மனைவியை மர்ம கும்பல் ஒன்றி, வீட்டில் கட்டி வைத்து , சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம், அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அமைச்சராக இருந்தவர் பெர்னார்டு தபை. இவர் அடிடாஸ் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் ஆவார். இவரது மனைவி டாமினிக் தபை. அண்மையில் அவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது.

பின்னர் உஷாராக செயல்பட்ட அவர்கள், பெர்னார்டு மற்றும் அவரது மனைவியை கட்டிலிருந்து தர தரவென இழுத்து கீழே தள்ளி, சரமாரியா அடித்து, உதைத்துள்ளனர். பின்னர் அவர்களை கட்டி வைத்துவிட்டு, வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

அதன்பின்னர் கயிற்றை அவிழ்த்துக்கொண்ட டாமினிக் பக்கத்து வீட்டினர் துணையுடன் காவல்துறையினரை வரவழைத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளை போன பொருட்களின் விவரங்களை சேகரித்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

தற்போது இந்த சம்பவம் பெரும் வைரலாகி வரும் நிலையில், முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலைமையா, அப்போ நாட்டின் பாதுகாப்பே கேள்வி குறிதானா என அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.