18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி… அதிரடி அறிவிப்பு…

18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் 2வது அலை மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் இதனை தடுக்க விழிப்புடன் செயல்பட்டு வருகின்றன. வல்லரசு நாடான அமெரிக்காவில்  3 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில்,  5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இதனிடையே கடந்தாண்டு நவம்பர் 3 ஆம் தேதி கொரோனா காலத்தில் நடந்த தேர்தலில் வென்று அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன். ஆட்சிக்கு வந்தால் முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் பைடன்.

ஆனால் இந்த இலக்கை 58 நாட்களிலேயே நிறைவு செய்து தற்போது 20 கோடி என்ற இலக்கை நோக்கி பயணிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.