பெரிய தப்பு பண்ணிட்டீங்க… நிறுத்திக்கோங்க… அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை..

வடகொரியாவின் அணுசக்தி திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா தனது விரோத போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறியும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், வடகொரியா மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் உலக பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அணுசக்தி திட்டத்திற்கு எதிராக தனது விரோத போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Back to top button