சொன்னா நம்புயா… எங்க நாட்டுல ஒருத்தருக்கு கூட கொரோனா இல்லை…கெத்தாக தெரிவித்த கிம்

தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என வடகொரியா அதிபர் அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் இருக்கும் நாடான வடகொரியா சர்வாதிகார ஆட்சிக்கு பெயர் போனது. ஏதேனும் தவறு நிகழ்ந்தால் உடனடியாக நாடு கடத்தல் அல்லது மரண தண்டனை தான் அங்கு தீர்ப்பாக எழுதப்படும். எப்போதும் தனித்தே இயங்கும் வடகொரியா கொரோனா விஷயத்தில் மட்டும் ஒன்று சேருமா என்ன?

வழக்கம்போல உலகமே கொரோனாவால் கதறிக்கொண்டிருந்த நிலையில் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என தொடர்ந்து கூறியது. அதேசமயம் தனது எல்லைகளை மூடி சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதித்தது.

ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கொரோனா பரவலில் இருந்து தங்கள் நாட்டு வீரர்களைப் பாதுகாக்கும் நோக்கில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.