நித்தியானந்தா ஆசிரமத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றம்...!

நித்தியானந்தா ஆசிரமத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றம்...!

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் இயங்கி வந்த நித்தியானந்தா ஆசிரமத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு அகற்றினர். 

சென்னை பல்லாவரம் பச்சையம்மன் கோவில் தெருவில் நித்யானந்தா ஆசிரமம் சுமார் 10 வருடங்களாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில் ஆசிரமம் அருகே உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட காலி அரசு நிலத்தை காம்பவுண்ட் சுவர் அமைத்து நித்தியானந்தா ஆசிரமத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

அரசு நிலத்தை கையகப்படுத்த அந்த கோரிக்கைகளை அடுத்து பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் காம்பவுண்ட் சுவர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டு வருகிறது. 

ஒரு ஏக்கர் 76 சென்டில் இயங்கி வந்த நித்தியானந்தா ஆசிரமத்தில் பல கோடி ரூபாய் மதிப்புடைய ஒரு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு என கண்டறியப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர்கள் அகற்றபட்டு வருகிறது.

 இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு டன் காணப்படுகிறது.காம்பவுண்ட் சுவர் கோவில் இருந்த சாமி சிலைகள் குதிரை போன்றவற்றை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com