இளைஞர்களின் நம்பிக்கையாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இளைஞர்களின் நம்பிக்கையாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர்

சேர்க்கிறது என்றால் கூட அது மிகையாகது. Hello my dear brothers and sisters என்று சிகாகோவில் விவேகானந்தர் பேசிய வார்த்தைகள் தனி மதிப்பைப் பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

1883 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா, கலைகள் பாரம்பரியம் இலக்கியங்கள் என ஒவ்வொரு துறையிலும் தன்னைத்தானே செதுக்க ஆரம்பித்தார். இவை மட்டும் இன்றி ஆங்கிலம், பெங்காலி என பல்வேறு மொழிகளில் கற்றுத் தேர்ந்தார்.

ராமகிருஷ்ண பிரம்மஹம்சாவின் பாடல்களிலும் போதனைகளிலும் மிகவும் ஈர்க்கப்பட்ட நரேந்திர தத்தா, பின்னர் விவேகானந்தர் ஆக உருவெடுத்தார்.

தற்போதைய நிலையில் ஆன்மிக போதனை, பாடல்கள்  கிண்டல்களுக்கு உட்படுத்தப்படும் நிலை நிலவி வருகிறது.. ஆனாலும் இன்று வரை ஆன்மீக தத்துவங்களிலும் போதனைகளிலும் பரம்பொருளாய் விளங்கி வருகிறார் விவேகானந்தர்.இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைத்த விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி  ராமகிருஷ்ணா மடத்தை நிறுவினார்.

'நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்',  'உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்' ஆனால் முயற்சி தேவை.., இதயம் சொல்வதை செய் வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு.., பொய் சொல்லி தப்பிக்காதே உண்மையை சொல்லி மாட்டிக் கொள்..  பொய் வாழ விடாது...உண்மை சாக விடாது... போன்ற பல்வேறு போதனைகளால் இளைஞர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

இதன் மூலம் இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இன்றுவரை வலம் வருகிறார் விவேகானந்தர்.தன்னுடைய எளிமை, தைரியம், தன்னம்பிக்கை ஆகிய வாழ்க்கை தத்துவத்தை பேசுவதோடு நிறுத்தி விடாமல் தன் வாழ்வனைத்தையும் மக்களுக்கு அர்ப்பணித்தார்.

ஆன்மீகம் என்ற போதனையை அனைவரும் முன்னெடுக்கையில் சமூகப் பொறுப்பை முன்னெடுத்தவர் விவேகானந்தர். ஒருவருடைய ஆற்றல் பலம் சிந்தனைக்கு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை தீர்க்கமாக நம்பினர்.

இன்னும் ஒரு படி மேல் போய் சமூகத்தின் மாற்றம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் செயல்களில் உள்ளது என்பதனை வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உணர்த்திக் கொண்டே இருந்தார். 'நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு' என அவரின் வரிகள், உடைந்து நொறுங்கியிருக்கும் இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்.. இத்தகைய சிந்தனையும்  எளிமையும் கொண்ட வள்ளலின் நினைவு தினம் இன்று.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com