குடிநீரில் கழிவு நீர்! தற்காத்துக் கொள்வது எப்படி?

குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
குடிநீரில் கழிவு நீர்! தற்காத்துக் கொள்வது எப்படி?
Published on
Updated on
2 min read

நீரின்றி அமையாது உலகு என்னும் சொல்லுக்கு ஏற்ப, தண்ணீர் மனிதனுக்கு அவசியமான ஒன்றாக விளங்குகிறது. அவ்வாறு உள்ள தண்ணீரின் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறியாமல் பயன்படுத்தப்பட கூடிய தண்ணீரில் இருந்து பல்வேறு விதமான நோய் பதிப்புகள் எற்படுகிறது. குறிப்பாக, பருவமழை காலங்களில், மழைநீரில் கழிவுநீர் கலந்து, அப்படியே நீர்நிலைகளிலும், நிலத்தடி நீரிலும் கலப்பதால், அதை பருகும் மக்கள் குடிநீரால் ஏற்படும் தொற்றுக்கு ஆளாவது வழக்கம். இதனால் மழைக்காலங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, பல இடங்களில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்ததால் உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் கலந்த குடிநீர் பயன்படுத்தியதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணமே இருந்து வருகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் மழைநீர் வடிகால் பணி, கழிவு நீர் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதால் குடி தண்ணீர் குழாயில் சில இடங்களில் உடைப்பு எற்படுகிறது. அதன் மூலமாக குடி தண்ணீரில் கழிவு நீர் கலக்கிறது. அதேபோல, இது போன்ற பாதிப்புகளை தடுப்பதற்கு பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும், அதேபோல வீடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டி உள்ளிட்டவைகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே நன்கு கழுவி வைத்து கொள்ள வேண்டும் எனவும், தண்ணீர் தொட்டிகளில் பாசி பிடித்திருந்தாலோ, முறையாக பராமரிக்காமல் இருந்தாலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஃப்ளோரின் குளோரைடு தண்ணீரில் சரியான அளவு இருக்க வேண்டும் என்றும் இருக்க வேண்டிய அளவில் இருந்து அதிகரித்து இருந்தால் பதிப்பு எற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com