சென்னை விமான நிலையத்தில் பச்சோந்திகள் கடத்தல்; ஒருவர் கைது

தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த 402 பச்சோந்திகள் பறிமுதல் திருப்பி அனுப்ப நடவடிக்கை
சென்னை விமான நிலையத்தில் பச்சோந்திகள் கடத்தல்; ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகளை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் இளைஞர் ஒருவர் கொண்டு வந்த அட்டைபெட்டியில் 402 எண்ணிக்கையில் நிறம் மாறும் ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அனுமதியின்றி நோய் பரப்பும் இந்த பச்சோந்திகளை அதே விமானத்தில் திருப்பிஅனுப்ப முடிவுசெய்து இறந்துவிட்ட 67 பச்சோந்திகளைத்தவிர . மீதமுள்ளவைகள் தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் அவைகளை கொண்டு வந்த வாலிபரிடம் அதிகாரிகள்.மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com