மத்திய அரசின்  'ரோஜர் மேளா'  திட்டத்தின் கீழ்.... தகுதியுடையவர்களுக்கு  அரசு  வேலை !  - பிரதமர்.

மத்திய அரசின் 'ரோஜர் மேளா' திட்டத்தின் கீழ்.... தகுதியுடையவர்களுக்கு அரசு வேலை ! - பிரதமர்.

Published on

மத்திய அரசின் வேலைவாய்ப்புத் திருவிழாவின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும், ரயில்வே உள்ளிட்ட துறைகளில் புதிதாக அரசு பணிகளில் சேர உள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு ரோஜர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தமாக பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, ரயில் மேலாளர், நிலைய மேலாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் என அரசின் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை  காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கினார். 
 
 இதையும் படிக்க;... வடமாநில தொழிலாளர்களால் உள்ளூர் ஆட்களுக்கு வேலை இல்லை....! விவசாயிகள் பொதுமக்கள் வேதனை...!

மேலும், இவர்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து பேசிய பிரதமர், தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருவதாக கூறியுள்ளார்.  40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்த அவர், பணி நியமன ஆணைகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com