அச்சச்சோ... ஷாலினிக்கு என்னாச்சு? படப்பிடிப்பில் இருந்து அவசர அவசரமாக ஓடி வந்த அஜித்

அச்சச்சோ... ஷாலினிக்கு என்னாச்சு? படப்பிடிப்பில் இருந்து அவசர அவசரமாக ஓடி வந்த அஜித்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில் மனைவிக்கு அறுவை சிகிச்சை என்ற செய்தியைக் கேட்டு அஜித்குமார் ஜூலை 2-ம் தேதியன்று படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே கிளம்பி அவசர அவசரமாக சென்னை விரைந்தார்.

இதற்கிடையே ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் லவ் யூ ஃபார் எவர் என பதிவிட்டார். திருமணத்துக்கு பிறகு திரையுலகை விட்டு முற்றிலும் ஒதுங்கிய ஷாலினி, குடும்பத்தை கவனித்து வருகிறார். ஆனால் திருமணத்துக்கு பிறகு அஜித்தின் திரைப்பயணம் ஏற்றம் கண்டது.

திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்களைப் பொறுத்தவரை அஜித் - ஷாலினி ஜோடியின் மீது அளவு கடந்த ஈர்ப்பும் பிரியமும் உண்டு. பொதுவாக சமூகவலைதளங்களில் மற்றும் பொது இடங்களில் தலை காட்டாதவர்கள் அஜித் - ஷாலினி. தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்தவர் ஷாலினி. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றார்.

தமிழில் 1997-ம் ஆண்டு காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். விஜய் - ஷாலினி நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் மிகவும் கவர்ந்து வருகிறது.

இதற்கிடையே 1999-ம் ஆண்டு அமர்க்களம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார் ஷாலினி. அப்போது படப்பிடிப்பின்போதே அஜித்குமாரை ஷாலினி உருகி உருகி காதலித்தார்.

அமர்க்களம் படத்தைத் தொடர்ந்து கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்து முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்தார்.

அதே நேரம் அஜித்துடனான காதல் தீவிரமானதைத் தொடர்ந்து இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதியன்று திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு திரையுலகை விட்டு முற்றிலும் ஒதுங்கிய ஷாலினி, குடும்பத்தை கவனித்து வருகிறார். ஆனால் திருமணத்துக்கு பிறகு அஜித்தின் திரைப்பயணம் ஏற்றம் கண்டது.

திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்களைப் பொறுத்தவரை அஜித் - ஷாலினி ஜோடியின் மீது அளவு கடந்த ஈர்ப்பும் பிரியமும் உண்டு. பொதுவாக சமூகவலைதளங்களில் மற்றும் பொது இடங்களில் தலை காட்டாதவர்கள் அஜித் - ஷாலினி. ஆனாலும் அஜித் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகும்.

அந்த வகையில் சமீபத்தில் ஷாலினி வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தற்போது அஜித்குமார், விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி திரைப்படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஸர்பைஜானில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் மனைவிக்கு அறுவை சிகிச்சை என்ற செய்தியைக் கேட்டு அஜித்குமார் ஜூலை 2-ம் தேதியன்று படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே கிளம்பி அவசர அவசரமாக சென்னை விரைந்தார்.

இதற்கிடையே ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் லவ் யூ ஃபார் எவர் என பதிவிட்டார்.

இதைக் கவனித்த ரசிகர்கள், ஷாலினிக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com