குடியிருப்பில் புகுந்த 15 அடி மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு...

பண்ணந்தூர் அருகே கிராம மக்களை மிரட்டிவந்த 15 அடி நீளமுள்ள மலை பம்பு பிடிபட்டது. இது அனைவரிடத்திலும் பெரும் பதற்றத்தைக் கிளப்பியுள்ளது.
குடியிருப்பில் புகுந்த 15 அடி மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு...

கிருஷ்ணகிரி | போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி அருகே உள்ள கொட்டவூர் குடிநீர் நீரேற்றம் நிலையம் அருகே  இளவரசு என்பவரது குடியிருப்பில் கோழிகள் கத்தும் சப்பதம் கேட்டு வீட்டின் வெளியே வந்து பார்க்கும் போது மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்க ஊர்ந்து சென்றுள்ளது.

இதனை கண்ட இளவரசு போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை லாவகரமாக பிடித்து சாக்குபையில் கட்டி எடுத்து சென்று தொகரப்பள்ளி காப்புகாட்டில் விட்டனர்.

இந்த மலைப்பாம்பு பிடிபட்டதால் அப்பகுதி நிம்மதி அடைந்தனர். மலைப்பாம்பை பிடித்த எனக்குத் துறையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com