இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மீது போர்க்குற்றம் தொடர்பாக புகார்!!!
சிங்கப்பூரில் தஞ்சம்:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இலங்கை அதிபராயிருந்த கோத்தபய ராஜபக்ச, பிரதமராயிருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இந்நிலையில் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.
குற்றப்பத்திரிக்கை:
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் வழக்கறிஞர்கள் 63 பக்க குற்ற பத்திரிக்கையை சிங்கப்பூரின் அட்டர்னி ஜெனரலிடம் சமர்ப்பித்துள்ளனர்.
போர்க்குற்றம்:
2009ல் இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றது. அப்போது இலங்கையின் பாதுகாப்பு துறை செயலாளராக பதவி வகித்தார் கோத்தபய ராஜபக்ச. உள்நாட்டு போரில் சர்வதேச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு போர்:
இலங்கையில் உள்நாடு போரின் போது மனித உரிமை சட்டங்களை மீறியதாக கூறப்படுகிறது.
”கொலை, மரணதண்டனை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள், தனிமனித சுதந்திரம் பறிப்பு, பட்டினி போன்ற மனிதாபிமற்ற முறையில் செயல்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னள் ராணுவ தளபதி:
கோத்தபய 1989ல் ராணுவ தளபதியாக இருந்தார். அவர் பொறுப்பு வகித்த மாவட்டத்தில் குறைந்தபட்சம் 700 பேர் காணாமல் போனதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. தொலைபேசி வழியாக ராணுவ வீரர்களுக்கு பிறப்பித்த உத்தரவுக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பதுங்கு குழிகளில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. உணவுக்காக வரிசையில் நின்ற மக்களும் தாக்கப்பட்டனர். இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தவர் கோத்தபய. இதற்கான ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன.
கோத்தபயவை கைது செய்து விசாரணை செய்யுமாறு சிங்கப்பூரின் அட்டர்னி ஜெனரலிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.