மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு..!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு..!

Published on

மத்திய  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனுராக் தாகூர்,

“மத்திய  அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தப்படுவதாகவும், ஜூலை 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என்றார். இதன்மூலம் 48 லட்சம் ஊழியர்களும், 70 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் ”, எனக் கூறினார்.

ரயில்வேதுறையில் அரசு சாரா பணியில் உள்ளோருக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் எனவும் இதற்காக ஆயிரத்து 969 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேலாளர்கள், டிராக் பராமரிப்பாளர்கள் என 11 லட்சம் பேர் இதன் மூலம் பயன்பெறுவர் எனவும் அவர் கூறினார். ராபி பயிரின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com