புதுச்சேரி முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பா?

புதுச்சேரி முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பா?

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் புதுச்சேரியில் நாளை நடைபெறுவதாக இருந்த முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பெரியார் மற்றும் அம்பேத்கர் இயக்கங்கள் அறிவித்திருந்தன.

விலைவாசி உயர்வு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் வல்லவனுடன் அந்த இயக்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முழு அடைப்பு எப்போது?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மக்கள் நலன் கருதி தீபாவளிக்கு  பின்னர் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினர். அதே நேரத்தில் திமுக எம்.பி.ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி நாளை மறுநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com