அமெரிக்காவின் நியூ மெக்சிகோவின் ருயிடோசோ சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவின் ருயிடோசோ சாலைகளில்  கரைபுரண்டு ஓடிய வெள்ளம்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவின் ருயிடோசோவில் பெய்த தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அல்புகெர்கியில் உள்ள தேசிய வானிலை சேவை மையம் வெளியிட்ட கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சிடார் க்ரீக், அப்பர் கேன்யன் மற்றும் பாரடைஸ் கனியன் உள்ளிட்ட பல பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் இடியுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com