அமொிக்காவை குற்றம்சாட்டும் ஹமாஸ் அமைப்பு ..!

பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை அமெரிக்கா வழிநடத்துவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ள அமெரிக்கா பல்வேறு வகைகளிலும் இஸ்ரேலுக்கு உதவி வருகிறது.

இந்த நிலையில் பாலஸ்தீனத்துக்கு எதிரான இந்த போரை வழிநடத்துவதே அமெரிக்காதான் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஹமாஸ் அமைப்பின் தலைவர் கலீத் மெஷால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், போரை முன்னெடுத்து செல்லும் அமெரிக்கா, இஸ்ரேலை ஆதரித்து ஆயுதங்களை வழங்கி வருவதாகவும், ஆக்கிரமிப்பாளர்கள் ஹமாஸ் மற்றும் காசா பகுதியை நசுக்க விரும்புகிறார்கள் எனவும் தொிவித்துள்ளாா். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com