மோசமான உடல்நிலையில் விளாடிமிர் புதின்!!

மோசமான உடல்நிலையில் விளாடிமிர் புதின்!!

கியூபா தலைவர் மிகுவல் டயஸ்-கனெல் ஒய் பெர்முடெஸ் உடனான சந்திப்பில் புதின் திடீரென அசௌகரியமாக உணர்ந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  நாற்காலியை இறுகப் பற்றிக்கொண்டு தன்னை நிதானப்படுத்தினார். 

கியூபா தலைவர் சந்திப்பு:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து மீண்டும் ஒரு பெரிய செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.  அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் கியூபா தலைவருடனான சந்திப்பின் போது, ​​புதின் பதற்றமடைந்து தனது நாற்காலியை அழுத்தமாக பிடித்தபடி காணப்பட்டார்.  அப்போது அவரது கைகளின் நிறம் மாறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அசௌகரியமான நிலை:

கியூபாவின் தி மிரர் செய்தி அறிக்கையின்படி,  இரு தலைவர்களின் சந்திப்பின் போது புதினின் முகம் வெளிறியும், உடல் வீங்கியும் இருந்ததாக தெரிவித்துள்ளது.  கியூபா தலைவருடனான கலந்துரையாடலில் அவர் மிகவும் அசௌகரியமாக காணப்பட்டார் எனவும் கூட்டத்தின் போது புதின் தொடர்ந்து அவரது கால்களை அசைத்துக்கொண்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர் சில தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

புதினுக்கு கொடிய நோயா?:

புதினுக்கு ஒரு கொடிய நோய் இருப்பதாகவும், அதன் காரணமாக அவரது செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.  கடந்த சில மாதங்களாகவே மதுவை அருந்தாமல் இருந்து வருகிறார் புதின். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com