தங்கம் விலை ரூ 480 குறைவு...!!   

தங்கம் விலை ரூ 480 குறைவு...!!   

அக்‌ஷய திருதியை ஒட்டி இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. 

அக்‌ஷய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், தங்கம்  சேரும் என்று ஒரு சிலர் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே இந்த நாளில் பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்க நகைக் கடைகளிலும் இன்று பொதுமக்களை ஈர்க்க பல்வேறு கவர்ச்சிகர சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து, 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து, 605 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இதேபோன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 90 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 40 காசுகளாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 80 ஆயிரத்து,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

அக்‌ஷய திருதியை நாளில் தங்கம் விலை குறைந்திருப்பது, தங்கம் வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.