அதிமுக பொதுக்குழு மேல் முறையீடு..! யார் கை ஓங்கும்?

அதிமுக பொதுக்குழு மேல் முறையீடு..! யார் கை ஓங்கும்?

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு இன்று விசாரணை.

ஓபிஎஸ் வெற்றி:

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என ஆகஸ்ட் 17 ஆம் தேதி உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அதை அடுத்து ஓபிஎஸ் அனைவரையும் கூட்டு தலைமையில் அதிமுகவை வழிநடத்த அழைப்பு விடுத்தார். 

ஈபிஎஸ் வெற்றி:

தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு விசாரணையில், தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது எனவும், ஜூலை 11 இல் நடந்த திமுக பொதுக்குழு செல்லும் எனவும் உயர் நீதிமன்ற இரு அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார்.

மேலும் படிக்க: எடப்பாடி! வராதீர்! வராதீர்..! ஓபிஎஸ் கோட்டையில் ஈபிஎஸ்க்கு எதிர்ப்பு..!

ஓபிஎஸ் மேல் முறையீடு:

உயர் நீதிமன்ற இரு நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். எடப்பாடி பழனிசாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக் கழகம் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது

இன்று விசாரணை:

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏழாவது அமர்வில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

மேலும் படிக்க: 1991 போல..! திமுகவிற்கு மிரட்டல் விடுத்த எச்.ராஜா..!

யாருக்கு சாதகம்:

அதிமுக வழக்குகளில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாறி மாறி வந்து கொண்டு இருப்பதால், இன்றைய விசாரணையில் யார் கை ஓங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் உச்ச நீதிமன்றம் சென்ற போது உட்கட்சி பிரச்சனைகளை பொதுக்குழுவில் பேசி தீர்த்துக்கொள்ளுமாறும், உயர் நீதிமன்றத்திற்கே திரும்பி அனுப்பியது. அதனால் இன்றைய விசாரணை எந்த கோணத்தில் செல்லும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.