அமைச்சர் பிடிஆர் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்... பகீர் கிளப்பும் பாஜகவின் நிர்மல் குமார்!

திமுக பிரிவினைவாத கோஷத்தை மீண்டும் எழுப்பும் நிலையில் இதற்கு உறுதுணையாகவுள்ள தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என பாஜகவை சேர்ந்த நிர்மல்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.  

அமைச்சர் பிடிஆர்  மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்...  பகீர் கிளப்பும் பாஜகவின் நிர்மல் குமார்!

திமுக பிரிவினைவாத கோஷத்தை மீண்டும் எழுப்பும் நிலையில் இதற்கு உறுதுணையாகவுள்ள தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என பாஜகவை சேர்ந்த நிர்மல்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் நிதியமைச்சராக பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் மத்திய அரசை சீண்டாமல் இருந்ததில்லை. மத்திய அரசு சார்பில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினரை தனது அறிவுபூர்வமான கேள்விகளாலும், புள்ளி விவரங்களாலும் தெறிக்கவிட்டு வருகிறார். இவரை சமாளிக்க முடியாமல் டெல்லி வட்டாரங்கள் தவித்து வருகிறது.

 

இந்த நிலையில், திமுக பிரிவினைவாத கோஷத்தை மீண்டும் எழுப்பும் நிலையில் இதற்கு உறுதுணையாகவுள்ள தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என பாஜகவை சேர்ந்த நிர்மல்குமார் தனது டிவிட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். ஏனெனில் தமிழகத்தில் அண்மை காலமாக திமுகவினரால் பயன்படுத்தப்படும் ’ஒன்றிய அரசு’ என்ற சொல்லாடல் தான் தமிழகத்தில் புதிய அரசியல் மோதலுக்கு வழிவகுக்கிறது என்றார். இதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட திமுகவினரும் ஒன்றிய அரசு கோஷத்தை பலமாக கையிலெடுத்துள்ளனர்.

இதுகுறித்து நிர்மல் குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “PTR பழனிவேல் தியாகராஜன் போன்றோர்களின் பிரிவினை பேச்சு தற்போது மத்திய அரசின் சின்னங்களை மாற்றும் அளவிற்கு சென்றுள்ளனர் திமுகவினர். சமூக வலைத்தளங்களில் Dravidian Stock, ஒன்றிய உயிரினங்கள் என பல திட்டங்கள் திடீரென உருவாக்கப்படுவதற்கு பின்னால் திமுகவின் 1962ம் ஆண்டு கோரிக்கை போன்ற ஏதேனும் சதித் திட்டம் தற்போது உள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் திமுகவினர் வெளியிட்டு வருவதாகவும் இதுபோன்ற அவதூறு செயல்களை செய்து வரும் திமுகவினர் மீது கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இது போன்ற அரசு முத்திரைகளை மாற்றும் வேலையை திமுகவினர் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துமாறு ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறோம் நிர்மல் குமார் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த சொல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதால் திமுக பிரிவிணைவாதத்தை கையிலெடுத்திருக்கிறது என்பது தமிழக பாஜகவினரின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் மத்திய - மாநில அரசுகளின் உறவில் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதில் சதி வேலை எதுவும் இருக்கிறதா என்பதை ஆராய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்களிடம் என தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார்  ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.