வருகிறார் ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நம்மல நாயுடு!! அரண்டு கிடக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!!

ஜெயலலிதா ஜெயிலுக்கு செல்ல முக்கிய காரணமானவர் நம்மல நாயுடு!!
வருகிறார் ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நம்மல நாயுடு!! அரண்டு கிடக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!!
Published on
Updated on
1 min read
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதற்கு முக்கிய காரணம் என்றால் அது நம்மல நாயுடு. 1996-ம் ஆண்டு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு விசாரணை ஆரம்பித்த ஆறு மாதங்களிலேயே, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார் விசாரணை அதிகாரி  நம்மல நாயுடு.
 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் எஸ்.பி-யாகப் 1996-களில் பணியாற்றி வந்தவர். பிறகு, 1997-ல் அவர் ஓய்வுபெறுவதற்கு முன்பே பதவி நீட்டிக்கப்பட்டது. ஜெயலலிதா மீதான வழக்கை கவனிப்பதற்காகவே, தி.மு.க ஆட்சி வரும்போதெல்லாம் அவருக்குப் பதவி நீட்டிப்பு தரப்படும். அதிமுக ஆட்சிக்கு வரும் போது அவரை பதவியிலிருந்து தூக்கி விடுவர்.
பெங்களூரு, உச்சநீதிமன்றம் என பல நீதிமன்றங்களில் ஜெயலலிதா உட்பட 4 பேரின் சொத்து குவிப்பு வழக்கிற்கு 20 வருடங்களாக சட்டப்போராட்டம் நடத்தியவர் நம்மல நாயுடு. கலர் டி.வி வழக்குக்காக சென்னை மத்திய சிறையில் இருந்த ஜெயலலிதாவிடம் 27 நாட்கள் விசாரணை நடத்தியவர். ஜெயலலிதாவின் வங்கி கணக்குகளை முடக்கி, அவருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். 
17 வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. ஜெயலலிதா உட்பட 4 பேர் சிறை செல்ல உறுதுணையாக இருந்து சாட்சியங்களை சேகரித்து, விசாரணையை தீவிரப்படுத்தியவர் நம்மல நாயுடு. தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசகராக செயல்பட மீண்டும் நம்மல நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என கிசு கிசுக்கப்படுகிறது. 
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com