தனி நாடு கோரும் விசிக...!

தனி நாடு கோரும் விசிக...!

தொடர்ந்து வலியுறுத்தப்படும் தனிதமிழ்நாடு கோரிக்கை...

ஆ.ராசாவின் தனிநாடு கோரிக்கை:

கடந்த 1938 ல் தொடங்கிய தனிதமிழ்நாடு கோரிக்கை தற்போது மீண்டும் அரசியல் அரங்கிற்குள் தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா, தனிதமிழ்நாடு கோரிக்கை குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார். அதாவது, “எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள்; தனித்தமிழ்நாடு கேட்கும் நிலைக்கு எங்களை கொண்டு செல்லாதீர்கள்; மாநில சுயாட்சி தாருங்கள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சர்ச்சையாக பேசினார். மேலும், அவர் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயகம் முக்கியம் என்று பதிவிட்டிருந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/stalin-and-rahul-gandhi-at-kanniyakumari-public-meet

தமிழ்நாட்டின் தனிக்கொடி:

கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற தமிழர் இறையாண்மை மாநாட்டில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 14 வதாக தமிழ்நாட்டின் தனிக்கொடி தீர்மானம் இருந்தது. 

தனிக்கொடி:

அதில் அவர்கள் கூறியிருந்தது என்னவென்றால்,  ”ஆகஸ்ட் 15 இந்திய விடுதலை நாள் மற்றும் ஜனவரி 26 இந்தியக் குடியரசு நாள் ஆகிய இரண்டு நாட்களிலும் இந்திய தேசியக் கொடியுடன் மாநிலத்தின் கொடியை தலைமைச்செயலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்றி வைத்திட வேண்டுமெனவும்; இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது” இவ்வாறான தீர்மானத்தை நிறைவேற்றியது விசிக கட்சி. இதனைத்தொடர்ந்து, தற்போது அதே தனிதமிழ்நாடு கோரிக்கை முன்வைத்து வன்னியரசு பேசியுள்ளார்.

விசிக தனிதமிழ்நாடு கோரிக்கை:

தமிழுணர்வு போராட்டங்களில் பங்கேற்ற செங்கொடியின் நினைவுநாளான இன்று  விசிக கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு மேடையில் பேசினார். அதில் ”இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழ்நாட்டை தனித்துவமான நாடாக்குவோம்” என தனிதமிழ்நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி வன்னியரசுஇ பேசியுள்ளார். இந்த சர்ச்சை கருத்து தொடர்பாக அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இப்படி தொடர்ந்து, தனிதமிழ்நாடு கோரிக்கையை திமுகவும், அதன் கூட்டணி கட்சியான விசிகவும் வலியுறுத்தி வருகிறது. இது குறித்தான கருத்துக்கள் அரசியல் அரங்கிற்குள் அவ்வப்போது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி கொண்டு தான் வருகிறது....