விபத்தில் இறந்த சைரஸ் மிஸ்த்ரி யார்? டாடா குழுமத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு?!!!

விபத்தில் இறந்த  சைரஸ் மிஸ்த்ரி யார்?  டாடா குழுமத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு?!!!

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் நடந்த விபத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி  உயிரிழந்துள்ளார். நாட்டின் பெரிய தொழிலதிபர்களில் சைரஸ்ஸும் ஒருவராக அறியப்படும் சைரஸ் மிஸ்த்ரியின் மரணம்  அனைவரையும் வருத்ததில் ஆழ்த்தியுள்ளது. 

குடும்ப பின்னணி:

சைரஸ் மிஸ்திரியின் தந்தை பல்லோன்ஜி மிஸ்திரி நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். இருப்பினும், அவர் எப்போதும் சாதாரண மனிதராகவே இருக்க விரும்பினார். அவர் ஊடகங்கள் மூலமாக புகழ் பெற முயற்சிக்கவில்லை. 

மிஸ்திரியின் தந்தை:

சைரஸ் மிஸ்திரியின் தந்தை பல்லோன்ஜி மிஸ்திரி உலகின் மிக பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். ஆனால்,அவர் பொது இடங்களில் அவ்வளவாக தோன்றவில்லை.  இதனால் மக்களால் பெரிய அளவில் அறியப்படவில்லை. பல்லோன்ஜி மிஸ்திரி 1929 இல் பார்சி குடும்பத்தில் பிறந்த இவர் இங்கிருந்து உயர் கல்விக்காக லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் சென்று படித்தார்.  அதற்கு முன்னர் அவர் மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கேனான் பள்ளியில் அவரது உயர்கல்வியை முடித்திருந்தார். அவருடைய 18வது வயதில் குடும்ப வணிகத்தில் ஈடுபட்டு அவரது தந்தையால் நிறுவப்பட்ட  நிறுவனத்திற்காக பல நாடுகளுக்கும் சென்று பணியாற்றினார். 1970 களில், மத்திய கிழக்கு, அபுதாபி, துபாய் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலும் அவருடைய முயற்சியால் வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளார். அவரது நிறுவனம் ஓமன் சுல்தானின் அரண்மனைகள்  உட்பட பல விஐபி கட்டிடங்களையும் கட்டிய பெருமைக்குரியது.

பல்லோன்ஜி ஐரிஷ் பெண்ணை மணந்து ஐரிஷ் குடியுரிமை பெற்றார். ஆனால் அவர் பெரும்பாலும் மும்பையிலேயே வசித்து வந்ததாக தெரிகிறது. அவரது நிறுவனம் இந்தியாவின் சிறப்பு மிக்க கட்டடங்களான ரிசர்வ் வங்கி  மற்றும் தாஜ் ஹோட்டல் போன்ற பிற கட்டிடங்களையும் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பல்லோன்ஜி குடும்பம்:

பல்லோன்ஜி மிஸ்திரிக்கு ஷபூர் மற்றும் சைரஸ் மிஸ்த்ரி என்ற இரண்டு மகன்களும் லைலா அல்லு என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். 

சைரஸ் மிஸ்த்ரி:

சைரஸ் 4 ஜூலை 1968 அன்று மும்பையில் பிறந்தார். சைரஸ் லண்டன் பிசினஸ் ஸ்கூலிலும் இந்தியாவின் இம்பீரியல் கல்லூரியிலும் படித்துள்ளார். அவரது தந்தையைப் பொன்று சைரஸ் மிஸ்திரியும் அயர்லாந்து குடியுரிமை பெற்றிருந்தார்.

டாடா குடும்பத்துடன் என்ன தொடர்பு?

சைரஸ் மிஸ்த்ரியின் சகோதரி அல்லு, நோயல் டாடாவை மணந்துள்ளார். இதில் நோயல் என்பவர் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். இதன் மூலம் மிஸ்திரி குடும்பத்தின் உறவு டாடா குடும்பத்துடன் ஏற்பட்டு தொழில்முறையிலும் அவர்கள் வலுவான பிணைப்புடன் உள்ளனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க: டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் மரணம்!!!!