இன்று முதல் இரண்டு பிறந்தநாட்கள் கொண்டாடும் அரசர் சார்லஸ்!!!

மகாராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததை ஒட்டி, அரசர் பதவியேற்கும் இளவரசர் சார்லஸ், இனி இரண்டு பிறந்தநாட்களைக் கொண்டாட இருக்கிறார். மேலும், அவருக்கு லைசென்ஸ் மற்றும் பாஸ்போர்ட் இனி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் இரண்டு பிறந்தநாட்கள் கொண்டாடும் அரசர் சார்லஸ்!!!
Published on
Updated on
2 min read

இங்கிலாந்து அரசராக பதவியேற்ற சார்லெஸ், தனது இளவரசர் பதவியில் இருந்து வந்த நிலையில், அவருக்கு பல வகையான வழிமுறைகளும் புதிதாக பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், அரசர் சார்லசுக்கு பல வகையான சலுகைகள் வழங்கப்படும் அல்லவா? ஒரு ராஜ்ஜியத்தின் அரசராயிற்றே! அப்படி என்னென்ன சலுகைகள் அவருக்கு உள்ளது என்பதை பார்க்கலாமா?

  • இனி லைசென்ஸ்- பாஸ்போர்ட் இல்லை!!!

அரசர் சார்லஸ் III-க்கு இனி ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. ஏன் என்றால், அவர் வருகைக்கு, உலகளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அனைத்து இடங்களிலும் செல்ல உரிமை உண்டு. மற்ற அரச குடும்பத்தினர் போல இல்லாமல், அரசர் சார்லஸ் III-க்காக அனுமதி கேட்டு, ஆவணம் வழங்கப்படும். அதனால், இங்கிலாந்தில் மட்டுமின்றி உலகளவில் அவருக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஓட்டுரிமை இல்லை!!!

பிரிட்டிஷ் ஏகாதிபதி என்றும் அரசியலில் தனது சார்பைக் காட்டக் கூடாது. அரசியலாட்சியில் தலையிடவும் அனுமதி இல்லை. ஆனாலும், புதிய அமைச்சரவை கூடும் போதும் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டும் போது, திறப்பு விழாவிற்கு மட்டுமே, அரசர்களும் ராணிகளும் அழைக்கப்படுவர். தனது நடுநிலை காட்டுவது கட்டாயமாக இருக்கும் நிலையில், தற்போது ஏகாதிபதியாகிய அரசர் சார்லஸ் III, தனது ஓட்டுரிமையை இழந்துள்ளார்.

  • அனைத்து அன்னங்களும் இவருக்கே சொந்தம்!!!

பிரிடிஷ் அரசாட்சியின் அரசராகிய சார்லஸ் III பேரில் தான் பெரும்பான்மையான சொத்துகள் மாற்றப்படும். அவ்வகையில், அந்த அரசர், மனிதர்களுக்கும் நிலங்களுக்கு மட்டும் அரசர் அல்ல.மிருகங்களுக்கும் உரிமை கொண்டாடுவர். அப்படி, பெயரற்ற, சொந்தம் கொண்டாடப்படாத அனைத்து அன்ன பட்சிகளும் பிரிடிஷ் அரசருக்கு தான் சொந்தமாகும்.

அவை மட்டுமல்ல, ஸ்டர்ஜன் எனப்படும் பெரிய மீன் வகை, டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் கூட அரசருக்கே சொந்தம். முதலில், பிரிடிஷின் தேமஸ் நதியில் உள்ள அன்னப் பறவைகள் கணக்கிடப்பட்ட நிலையில், 12ம் நூற்றாண்டு தொடங்கி, இன்று வரை கணக்கெடுப்பு, காப்பகத்திற்கான வேலையாகவும் சேர்த்து, ஒரு பாரம்பரிய வழிமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

  • உதியோகப்பூர்வ கவிஞர்:

ஒவ்வொரு 10 வருடங்களுக்கும், பிரிட்டன் மன்னருக்கு வசனங்களை இயற்றும் ஒரு கவிஞர் பரிசு பெற்றவரை நியமிக்கிறது. அந்த கெளரவ பதவியில் 720 பாட்டில்களுக்கு சமமான ஷெர்ரி ஃபட் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாரம்பரியம் 17 ஆம் நூற்றாண்டு முதலே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கரோல் ஆன் டஃபி (Carol Ann Duffy) 2009 இல் அதிகாரப்பூர்வ அரச கவிஞராக நியமிக்கப்பட்டபோது, ​இது வரை அல்லாத முதல் பெண் அரச ​​​கவிஞராக ஆனார். அவர் தான் 2011 இல் இளவரசர் வில்லியமின் திருமணத்திற்காகவும், 2013 இல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவின் 60 வது ஆண்டுக்காகவும், மற்றும் 2018 இல் இளவரசர் ஹாரியின் திருமணத்திற்காகவும் கவிதைகளை இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அரசு சார்பில் உத்தரவு:

அரசாட்சிக்கு யார் தொடர்ச்சியாக தங்களது பொருட்களையும் சேவைகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு அரசர் சார்பில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ அனுமதியும் உத்தரவும் வழங்கப்படும். இந்த வாரண்ட்டானது, மிகப்பேரிய கௌரவமாகக் கருதப்படும் நிலையில், இந்த அதிராப்பூர்வ அத்தாட்சி மூலம் அவர்களது விற்பனை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

வாரண்ட் வழங்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களில் அரச ஆயுதங்களைப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளன. Burberry, Cadbury, Jaguar Cars, Land Rover, Samsung மற்றும் Waitrose பல்பொருள் அங்காடிகள் அரச வாரண்ட் உள்ள நிறுவனங்களில் அடங்கும்.

  • இரண்டு பிறந்தநாட்கள்:

பொதுவாக அரசர் மற்றும் மகாராணியாரின் பிறந்தநாளுக்கு பரேடுகளும், பொதுவான கொண்டாட்டங்களும் நடைபெறுவது வழக்கம். 250 வருடங்களுக்கு முன்னிருந்து தொடரப்படும் இந்த பாரம்பரியத்தை மழை காலங்களிலும் பனிகாலங்களிலும் கடைபிடிக்க முடியாதது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒரு வேளை அரசருக்கு பிறந்தநாள் பனி காலங்களில் வந்தால், அவர்களுக்கு, வெயில் காலங்களில் இன்னுமொரு பிறந்தநாள் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படும்.

இந்த பொது கொண்டாட்டத்தில், 1400 ராணுவ படை வீரர்கள், 200 குதிரைகள், 400 இசைக் கலைஞர்கள் இணைந்து, ராணுவ துல்லிய காட்சியை நிகழ்ச்சியாக நடத்துவர். இதன் பெயர், “ட்ரூப்பிங் தி கலர்” (Trooping the Colour)

நவம்பர் 14ம் தேதி பிறந்த அரசர் சர்லஸ், தனது அதிகாரப்பூர்வ பிறந்தநாளை, வெயில் காலங்களில் மறுபடியும் கொண்டாடுவார். மேலும், அரசர்கள், தங்களது உண்மையான பிறந்த நாளை அவர்கள் தனிப்பட்ட முறையில் மட்டுமே கொண்டாட முடியும். மறைந்த மகாராணி எலிசபெத் 2- விற்கும் இரண்டு பிறந்தநாட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சலுகைகள் தாண்டி, பாரம்பரிய முறை படி பல விதிமுறைகள் அவருக்கு விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com