ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆண்மை இருக்கிறதா? – கடுமையாக விமர்சித்த தங்க தமிழ்செல்வன்…  

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆண்மை இருந்தால் சசிகலாவை கட்சியில் சேர்க்க முடியாது என அன்றைக்கு பேசிய போது தெரிவித்திருக்க வேண்டும் என தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ் செல்வன் கடுமையாக சாடியுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆண்மை இருக்கிறதா? – கடுமையாக விமர்சித்த தங்க தமிழ்செல்வன்…   

தேனியில் திமுகவின் தங்க தமிழ் செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இதே ஓபிஎஸ்.. இதே வாயில.. இதே போடி டவுனில் அன்னைக்கு என்ன சொன்னாரு? சசிகலாவை சேர்த்துப்பீங்களான்னு செய்தியாளர்கள் கேட்டதுக்கு, பொதுக்குழுதான் கூடி முடிவு பண்ணும்னு சொன்னாரா இல்லையா? இவருக்கு தாட்டியம் இருந்திருந்தால், ஆண்மை இருந்திருந்தால், சசிகலாவை நான் கட்சிக்குள் சேர்க்கவே முடியாதுன்னு பேட்டி தந்திருக்க வேண்டியதுதானே? ஏன் சொல்லலல? இவருக்கு ஆண்மை இல்லை என விமர்சித்தார்.

நான் அதிமுகவில் இருந்த போதும் சசிகலாவுடன் நேரடி தொடர்பில் இல்லை . என்னை கேட்டால் சசிகலா ஒரு பலிகடா என்றுதான் சொல்வேன்.. தினகரன் செய்த சதியின் பலிகடாதான் சசிகலா. இந்த தேர்தலில் அமமுக எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்து சசிகலாவின் கம்பேக்கும் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர்தான் பன்னீர்செல்வம். ஜெயலலிதாவை சசிகலாதான் கொன்றார் என்றும் கூட குற்றஞ்சாட்டியவர்தான் பன்னீர்செல்வம். இதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் கூட சொன்னார்.

இத்தனை வருடம் ஆகிவிட்டது. இன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணை கமிஷன் முன்பும் கூட பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. சசிகலா மூலம்தான் பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். ஆனால் அதே சசிகலாவிற்கு பன்னீர்செல்வம் துரோகம் செய்தார். இவரை எல்லாம் எப்படி நம்ப முடியும்? என்று தங்க தமிழ்ச்செல்வன் கோபமாக கேள்வி எழுப்பினார்.

மேலும் இதே ஓபிஎஸ்.. இதே வாயில், இதே போடி டவுனில் அன்னைக்கு பேசும்போது, சசிகலாவை சேர்த்துப்பீங்களான்னு செய்தியாளர்கள் கேட்டதுக்கு, பொதுக்குழுதான் கூடி முடிவு பண்ணும்னு சொன்னாரா இல்லையா? இவருக்கு தாட்டியம் இருந்திருந்தால், ஆண்மை இருந்திருந்தால், சசிகலாவை நான் கட்சிக்குள் சேர்க்கவே முடியாதுன்னு பேட்டி தந்திருக்க வேண்டியதுதானே? ஏன் சொல்லலல? இவருக்கு ஆண்மை இல்லை. நான் சொல்றேன்.. ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆதரவாளர் தான்... சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கூட எந்தவொரு பிரச்சாரத்திலும் ஓபிஎஸ், சசிகலா குறித்து விமர்சிக்கவில்லை... டிடிவி தினகரனுடன் கூட்டு சேர்ந்துதான் என்னை தோற்கடித்தனர். இன்றைக்கும் ஓபிஎஸ் சசிகலாவின் விஸ்வாசிதான், சசிகலா சுற்றுப்பயணம் செய்தால் ஓபிஎஸ் குடும்பமே போய், அவரது காலில் விழுந்து தஞ்சமாவது உறுதி என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com