நிர்வாண போட்டோக்களை...டாக்டரின் வாட்ஸ்அப்-க்கு அனுப்பிய 2 பெண்கள்...ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்!

நிர்வாண போட்டோக்களை வாட்ஸ் அப்பு-க்கு அனுப்பி , டாக்டரை மிரட்டி வந்த  2 பெண்களை போலீசார் கைது செய்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

நிர்வாண போட்டோக்களை...டாக்டரின் வாட்ஸ்அப்-க்கு அனுப்பிய 2 பெண்கள்...ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்!

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஷா நவாஸ். 32 வயதாகும் இவர் டாக்டர் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அது புது நம்பர் என்பதால் மெசஜை பார்க்காத ஷாவிற்கு, மீண்டும் அதே நம்பரில் இருந்து மெசஜ்கள் வந்துள்ளது. அதனால் அந்த மெசஜை ஓபன் செய்து பார்த்தபோது, அதில்  2 பெண்களின் நிர்வாண போட்டோக்கள் வந்திருந்தன. அந்த போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷா, உடனே அந்த நம்பருக்கு போன் செய்தபோது, யாருமே பதிலளிக்கவில்லை. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அந்த எண்ணிலிருந்து அழைப்புவந்தபோது, பெண் ஒருவர் 3 லட்சம் ரூபாய் தராவிட்டால் உங்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்படும் என மிரட்டியுள்ளனர். 

அதற்கு பதிலளித்த டாக்டர் ஷா, பணமெல்லாம் தர முடியாது என  மறுத்துவிட்டார். அவர் சொன்ன சிறிது நேரத்திலேயே வெளிநாட்டில் இருந்து அதுவும் வேறு ஒரு நம்பரிலிருந்து அவருக்கு போன் வந்துள்ளது. தொடர்ந்து இப்படி புது புது நம்பரில் இருந்து போன்கள் வந்து கொண்டே இருந்ததால், பயந்து போன ஷா உடனடியாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணையை ஆரம்பித்த போலீசார், முதல் வேளையாக மிரட்டி பணம் கேட்பது யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக, கடந்த சில நாட்களாக டாக்டரின் வாட்ஸ்அப்பை போலீசாரே பயன்படுத்தி வந்துள்ளனர்.  

இந்நிலையில், மறுபடியும் அதே நம்பரிலிருந்து போன் வந்ததையடுத்து, போலீசாரே டாக்டர் போல பேசியுள்ளனர். அதை அறியாத அந்த பெண் 3 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று போனில் மிரட்டியுள்ளனர். போலீசாரும் உடனே பணத்தை தருவதாக ஒப்புக் கொள்வது போல் நடித்து, அவர்கள் கூறிய இடத்துக்கு டாக்டர் ஷாவையும் அழைத்து சென்றனர்.

அவர்கள் கூறிய படியே, ரயில்வே ஸ்டேஷனுக்கு பெங்களூரிலிருந்து ஒரு பெண் ஒருவர் வந்தார். டாக்டரை பார்த்துவிட்டு கார் அருகே நெருங்கி வந்த பெண்ணை, அதுவரை மறைந்திருந்த போலீசார்  சுற்றி வளைத்து கையும் களவுமாக கைது செய்து, அவரிடம் விசாரணையும் நடத்தினர். விசாரணையில் சம்பந்தப்பட்ட பெண் காயங்குளத்தை சேர்ந்த நிஷா என்பது தெரியவந்தது. மேலும், நிஷாவை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லும்போது, அவரது செல்போன் அடித்ததால், சந்தேகித்த  போலீசார் போனில் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசுமாறு நிஷாவிடம் சொல்லி உள்ளனர். அதனால் நிஷாவும் ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு பேசினார். 

அப்போது, மண்ணுத்தியை சேர்ந்த நௌஃபியா என்ற பெண், "3 லட்சம் வாங்கிட்டியா? உடனே வந்து என்கிட்ட தந்துடு, என்கிட்ட இருந்து நீ தப்ப முடியாது" என்று மிரட்டினார். இதையடுத்து நௌஃபியாவை பணம் வாங்குவதற்கு குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படி நிஷாவை சொல்ல சொன்னார்கள் போலீசார். அதன்படி நிஷாவும் சொல்ல அதை  நம்பி நௌஃபியா விரைந்து வர, அவரையும் போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர். தற்போது 2 பெண்களிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதில் ட்விஸ்ட் என்னன்னு பார்த்தா...கைதான இருவருமே நெருங்கிய தோழிகளாம்..!