மூதாட்டியை கொன்று 30 சவரன் நகை திருட்டு...!

சிவகங்கை அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி காளி அம்மன் கோயில் அருகே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி லட்சுமி. இவர் தனது உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, தனது வீட்டில் தனியே இருந்துள்ளார்.

இதையும் படிக்க : 4 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்...களைகட்டிய தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம்...!

அப்போது வீட்டிற்கு வந்த இளம்பெண் ஒருவர், மகளிர் உரிமைத்தொகை கூடுதலாக 500 ரூபாய் பெற்று தருவதாக கூறி பேசியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த இளம் பெண், லட்சுமி அணிந்திருந்த  நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டார்.

கொள்ளை சம்பவத்தின் போது இவர்களுக்குள் நடந்த மோதலில் மூதாட்டி லட்சுமி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.