முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 47 கிராம் வைரம் பறிமுதல்…  

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கிலோ கணக்கில் தங்கம்  வெள்ளி மற்றும் 35 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 47 கிராம் வைரம் பறிமுதல்…   

அதிமுக அரசில் 2016- 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வணிகத்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி வீரமணி. மேலும்  2011 -2021 ஆம் ஆண்டு காலகட்டம் வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இவர் கடந்த  10 ஆண்டுகளில் சட்டவிரோதமாக 76 புள்ளி 65 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம்,  அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. அதுமட்டுமல்லாது அவரது குடும்பத்தார் பெயரிலும் பெங்களூரு, சென்னை, திருப்பத்தூரில் சொத்து வாங்கியுள்ளதாக கூறப்பட்டது.

இதனிடையே வருமானத்திற்கு அதிகமாக 654 சதவிதம் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையினர், வீரமணி மீது எப்ஐஆர் பதிவு செய்தனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று கே.சி. வீரமணிக்கு சொந்தமான வீடுகள் சொகுசு  பங்களாக்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்கள் என 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

12 மணி நேரத்துக்கும் மேலாக  லஞ்ச ஒழிப்பு சோதனை நீடித்து வரும் நிலையில்  எவ்வளவு பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டடுள்ளது என்பது குறித்த  தகவலை் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 35 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், சுமார் 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, 47 கிராம் வைரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளன. இவற்றைத் தவிர ரோல்ஸ் ராய்ஸ் உள்பட 9 சொகுசுக் கார்கள், 5 கம்யூட்டர் ஹார்ட் டிஸ்குகள், சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கிப் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். 1,84  லட்சம் லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீரமணியின் வீட்டின் முன் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள 275 யூனிட் மணல் குவித்து வைக்கபட்டிருப்பதையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 13 மணி நேரத்தைக் கடந்தும் சோதனை தொடர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com