கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்ட மாணவன்...! அழுகிய நிலையில் உடல் மீட்பு..!

ஶ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவரின் உடல் தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்ட மாணவன்...! அழுகிய நிலையில் உடல் மீட்பு..!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அலோக் குமார் (19). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நடுவீரபட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்,

இந்நிலையில், கடந்த 11 - ஆம் தேதி அன்று செமஸ்டர் விடுமுறை என்பதால் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், தங்களின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். ஆனால் அலோக் குமாருக்கு, சொந்த ஊர் செல்வதற்கான விமான பயணசீட்டு கிடைக்காததால், கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விடுதியிலேயே தான் தங்கி கொள்வதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து இன்று, கல்லூரி மீண்டும் திறக்கபடவுள்ளதால் மாணவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்பிய போது, அலோக் குமார் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது அழுகிய நிலையில் அலோக்குமார் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்,

பின்னர் போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களை உடலை கைப்பற்றி அலோக்குமார் தூக்கிட்டு மூன்று நாட்கள் இருக்ககூடும் என தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உடலை  கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விடுமுறை அன்று சொந்த ஊர் செல்வதற்கு விமான பயணசீட்டு கிடைகாததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.