நான்காவது மனைவியின் மகளை வன்கொடுமை செய்த புகாரில் 8 குழந்தைகளின் தந்தை: போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு...

நான்காவது மனைவியின் மகளை வன்கொடுமை செய்த புகாரில் 8 குழந்தைகளின் தந்தை: போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு...

வாணியம்பாடியில் 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 8 குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் பாரதி (47). இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் ஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு 1ஆண், 1பெண் குழந்தை உள்ள நிலையில், முதல் மனைவி இறந்ததால் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில், இரண்டாவது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதால் மூன்றாவது திருமணம் செய்துகொண்டதில் 3 வது மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
 
இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக சென்னையில் இருந்த போது அங்கே ஜீனத் என்ற 2 குழந்தைகளின் தாயான ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 4 வது மனைவியுடன் வீட்டில் முதல் மனைவியின் 2 குழந்தைகள், 2 வது மற்றும் 3 வது மனைவியின் குழந்தைகள் மற்றும் 4 வது மாணவியின் முதல் கணவருக்கு பிறந்த 10 வயது மகள் மற்றும் மகன் உறங்கிக் கொண்டிருந்தனர்.
 
அப்போது உறங்கிக்கொண்டிருந்த 4 வது மனைவியின் 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 11 வயது சிறுமி அவரது தாயிடம் நடந்ததை தெரிவித்ததன் பேரில் ஜீனத் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதி (47) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.