ஒரு சின்ன இட தகராறு...திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துக்கு நிகழ்ந்த விபரீதம்!

ஒரு சின்ன இட தகராறு...திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துக்கு நிகழ்ந்த விபரீதம்!

கோவை அருகே திமுக கவுன்சிலர், அவரது கணவர், மகன் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


கோவை மலுமிச்சம்பட்டி அவ்வை நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சித்ரா மலுமிச்சம்பட்டி கிராம ஊராட்சியின் 3-வது வார்டு கவுன்சிலர். இவர்களது மகன் மோகன் கார்பெண்டராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் குடும்பத்துடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வீட்டுக்குள் 5 மர்மநபர்கள் நுழைந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கவுன்சிலர் சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதையும் படிக்க : ”பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் சாதி வன்முறையில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது”எடப்பாடி பழனிசாமி!

இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இடம் வாங்கும் விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.