ஆள் மாறாட்டம் செய்து நில அபகரிப்பு... ரூ. 12 கோடிக்கு மோசடி செய்த நபர்கள்... 

சென்னையில் வெவ்வேறு இரண்டு  இடங்களில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை நில அபகரிப்பு செய்த மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆள் மாறாட்டம் செய்து நில அபகரிப்பு... ரூ. 12 கோடிக்கு மோசடி செய்த நபர்கள்... 

சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் மகானாந்தப்புரத்தை சேர்ந்த சத்தியசீலன் என்பவருக்கு சொந்தமான 73 சென்ட் காலி மனையை போலி ஆவணங்கள் மூலமாகவும் ஆள்மாறாட்டம் மூலமாக தன்னுடைய நிலத்தை அபகரித்துள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலியாக ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்த அய்யனார் மற்றும் வெங்கடாசலம் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட  அய்யனார் மற்றும்  வெங்கடாசலம் ஆகிய 2 பேருக்கும் பொது அதிகாரம் கொடுத்து அதன்பேரில் போலி ஆவணங்கள் உருவாக்கி 50 லட்சம் வரை லாபம் அடைந்து இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் அனிதா மேத்யூஸ் என்பவருக்கு சொந்தமான சென்னை புறநகர் காஞ்சிபுரம் மாவட்டம் எஸ் கொளத்தூரில் 10 சென்ட் காலி மனையை போலி ஆவணங்கள் மூலமாகவும் ஆள்மாறாட்டம் மூலமாகவும் அபகரிப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற கார்த்திகேயன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் 2 கோடி மதிப்புள்ள இடத்தை 60 லட்சத்திற்கு விலைபேசி நாற்பத்தி மூன்று லட்சம் அட்வான்சாக பெற்று லாபம் அடைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.