காரில் இருந்து பெண்ணை கடத்த முயன்ற மர்ம நபர்கள்...

காரில் இருந்து பெண்ணை கடத்த முயன்ற மர்ம நபர்கள்...

ஹரியானாவில் காரில் இருந்த பெண்ணை கடத்த முயன்ற மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. யமுனா நகரில் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றபின், ஒரு இளம்பெண் தனது காரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்போது திடீரென காருக்குள் புகுந்த 4 பேர், அவரைக் கடத்த முயன்றனர். தொடர்ந்து பெண் கூச்சலிட்டதில் அனைவரும் தப்பியோடிய நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து பெண்ணை கடத்த முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க | 2022-ல் 69 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்...